Skip to content
loyalties.space
Cart0
Back to the book

Myth & Epic

சிலை யெழுபது மூலமும், 1915

Kambar · 1915

சிலை யெழுபது மூலமும், 1915 - விக்கிமூலம் உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் ஆலமரத்தடி நாட்டுடைமை நூல்கள் உதவி தொகுத்தல் உதவி ஆவணங்கள் உதவி கோருக புதுப்பயனர் உதவி தமிழில் எழுத ஏதாவது ஒரு படைப்பு ஏதாவது ஓர் அட்டவணை Display Options தேடு தேடு தோற்றம் நன்கொடையளி கணக்கை ஆக்கு புகுபதிகை தனிப்பட்ட கருவிகள் நன்கொடையளி கணக்கை ஆக்கு புகுபதிகை சிலை யெழுபது மூலமும், 1915 மொழிகளைச் சேர் தொடுப்புகளைச் சேர் பக்கம் மூலம் உரையாடல் தமிழ் படிக்கவும் தொகுக்கவும் பக்க வரலாறு கருவிகள் கருவிகள் move to sidebar மறை செயல்கள் படிக்கவும் தொகுக்கவும் பக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று நிலையான தொடுப்பு இப்பக்கத்தின் தகவல் இப்பக்கத்தை மேற்கோள் காட்டு குறுகிய உரலியைப் பெறு Switch to legacy parser தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்கிப்பீடியா விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு அச்சு/ஏற்றுமதி அச்சுக்கான பதிப்பு EPUBஆக பதிவிறக்குக MOBIஆக பதிவிறக்குக Download PDF வேறு வடிவத்தில் பதிவிறக்க பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் விக்கிபீடியா விக்கித்தரவுஉருப்படி தோற்றம் move to sidebar மறை Download விக்கிமூலம் இலிருந்து சிலை யெழுபது மூலமும், 1915 (1915) கம்பர், பேழைக்குடி ம. துரைசாமி 001 →→ உடன் புறத்திட்டங்கள்: விக்கித்தரவு. ஆ. சுப்பிரமணிய நாயகர் பதிப்பு. இந்நூல் தொடர்புடைய துணைப்பக்கங்கள் மொத்தம் ஒன்பது ஆகும். காண்க: சிலையெழுபது/ஓலைச்சுவடி 627498சிலை யெழுபது மூலமும், 1915கம்பர், பேழைக்குடி ம. துரைசாமி1915 - - - - - இவ்வடிவில் பதிவிறக்குக ​ ௳ கடவுள் துணை க்ஷத்திரியர்களாகிய வன்னிய பூபதிகள் பேரில் மகாகவியாகிய கம்பர் பாடிய சிலை யெழுபது மூலமும் பேழைக்குடி ம. துரைசாமி நாயகரவர்கள் இயற்றிய தெளிவுரையும். வன்னிதலமித்திரன் பத்திராதிபர் ஆ. சுப்பிரமணிய நாயகரவர்களால் பிரசுரிக்கப்பட்டது. 1915 விலை அணா 6.] [தபாற் கூலி 2. சென்னை வேப்பேரி மதுகரவேணிவிலாசம் பிரஸ். ",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/2"},"num":{"wt":"2"},"formatted":{"wt":"2"},"quality":{"wt":"3"}},"i":0}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/2","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/2"},"params":{},"i":1}},"<pageseparator /><span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/3"},"num":{"wt":"3"},"formatted":{"wt":"3"},"quality":{"wt":"3"}},"i":2}},"</span>"]}'>​ ௳ கடவுள் துணை. கம்பர்வரலாறு. பூ மணக்கும் பொழில் மலிந்த தமிழ் நாட்டிலே “சோழவளநாடு சோறுடைத்து” என்றபடி நீர்நில வளங்களாற்சிறந்த சோழமண்டலத்திலே தஞ்சையை யடுத்த தேரழுந்தூர் எனவழங்கும் திருவழுந்தூரிலே கம்பர் வாழ்ந்திருந்தனர் என்பர். கம்பர் வீட்டில் நாடோறும் புதுமட்பாண்டங்களில் சமையல் செய்வது வழக்கமாகையால் பிரதிதினமும் சமையல்செய்தபாண்டங்களைக் கொல்லையில் ஓர் புறத்தில் எறிந்துவந்ததால் நாளடைவில் அவையோர் மேடாயின. கம்பருடைய வாழ்க்கைக்கு அறிகுறியாமாறு இம்மேட்டை எவரும் அழிக்காமல் விட்டதனால் நாளதுகாறு அதுகெடாது “கம்பர்மேடு” எனவழங்கப்பட்டு வருகின்றது. இவரை கம்பநாடு என்னும் ஒருசிறநாட்டையாண்டுவந்த சிற்றரசனுடைய புதல்வர் என்றும், ஒச்சன்வீட்டில் வளர்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இவர் தன்மகன் அம்பிகாபதி இராசகுமாரத்தியை இச்சித்ததனால் அரசன் சினந்து அவனைக்கொன்ற காரணம்பற்றிப் பழிக்குப்பழி வாங்கத் தருணம் பார்த்திருந்த இவர் வேட்டையாடும்போது ஒரு யானையால் துரத்திவரப்பட்ட அவ்வரசகுமாரனை “காட்டானை விட்டாலும் கவி யானை விடுமா” என்று ஈட்டியால் குத்திக்கொன்றனர்; என்றதொரு கதையைக்கொண்டு இவர் க்ஷத்திரியரல்லராயின் அங்ஙனஞ் செய்யத் துனியாரெனச் சிலர் கருதுகின்றனர். ​ <span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/4"},"num":{"wt":"4"},"formatted":{"wt":"4"},"quality":{"wt":"3"}},"i":1}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/4","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/4"},"params":{},"i":2}},"<pageseparator /><span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/5"},"num":{"wt":"5"},"formatted":{"wt":"5"},"quality":{"wt":"3"}},"i":3}},"</span>"]}'>“ஈடார்தருஞ்சோழ நாடதிலுறுந்திரு வழுந்தூரினில் பீடாருமோச்சக்குலத்தொருவனவ்வூர்ப் பெருங்கோயில்வாய் நாடாறுதிக்குந் தொறுஞ்சென்று சங்கூ துநல்வேலையான் கோடாமலதுசெய்து வருநாளுளொருநாளிற் கூறாயிடை. கம்பத்தினருகோர் சிசுக்கண்டு பெருகுங் களிப்போடெடுத் தம்பத்தனையும் வென்ற விழியுற்றமனையாள்கை யதைநல்கினான் கொம்பத்தவவண் மார்பிலமுதூறண்முதலாயகுணமெய்தலால் நம்பத்திகண்டீ சனருள் செல்வமிதுவென்னநனியெண்ணினார். கம்பத்தினடியிற்கிடந்திட்டதாற் கம்பனென்னப்பெயர் உம்பர்க்குமெய்தாதபேறான பிள்ளைக்கு வந்தோதினார்.” எனக்கூறும் புலவர் புராணத்தால் இவர் திருவழுந்தூர் ஓச்சன்வீட்டில் சிலகாலம் வளர்ந்தவர் என்பது உறுதிப்படுகின்றது. கம்பத்தினடியிற் கண்டெடுக்கப்பட்டவராதலால் கம்பர் எனபெயர்பெற்றாரென்றும், காளிவரம்பெற்றுக் கவிபாடுமுன்னரே அறிவிலாச்சிறியராய்க்கம்பம்போல் இருந்தவராதலின் மற்றச்சிறுவர்கள் இவரைக் கம்பன் என்றழைத்த காரணத்தால் கம்பர் எனப்பட்டார் என்றும், இவர் ஓச்சன்வீட்டில் வளர்ந்து வருங்கால், திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப முதலியார் இவரைத் தம்மில்லறத்திற்கழைத்துவந்து தம்மைந்தரோடு இவரையுங்கூட்டி ஓர்கணக்காயரிடத்தில் அநுப்பி கல்விபயில்விக்க அவ்வுபாத்தியாயரது கம்பங்கொல்லையைக் காத்திருந்த காரணம்பற்றி கம்பர்எனவாயிற்றென்றும், அவ்வாறு கம்பங்கொல்லையைக் காத்துவரும் நாட்களில் ஓர்நாள் நடுப்பகலில் நித்திரைவர அங்கிருந்த காளி கோயிலிற் படுத்து தூங்கிவிடவும் ஒருகுதிரைவந்து கொல்லையை யழிப்பதாகக் கனவுகண்டு திடுக்கிட்டெழுந்து பார்க்க அவ்வாறே அவ்வூர் அதிகாரியாகிய காளிங்கராயனது குதிரைவந்து கொல்லையை அழித்தலைக் கண்டு அதனை எவ்வளவு ஓட்டியும் ஓடாமல் மேயக்​கண்டு தமது உபாத்தியாயருக் கஞ்சி “கோ” என்றழுதனர். அங்ஙனம் அழுகின்ற அச்சிறுவர் முன்பாகக் காளிகாதேவி தோன்றி “நல்லிளஞ்சிறுவ! அழாதே நின்னாவை நீட்டு” எனவும் அவ்வாறே தம்நாவை நீட்ட அத்தேவி அவர்நாவில் கலைமகளாரது பீஜாக்ஷரத்தை எழுதிவிட்டு மறைந்துபோயினள். உடனே அம்மைந்தர் வாய்த்தவயிரபுர மாகாளியம்மேகேள் காய்த்ததினைப்புனத்திற் காலைவைத்துச் — சாய்த்துக் கதிரைமாளத்தின்ற காளிங்கராயன் குதிரைமாளக் கொண்டுபோ. என்றொரு வெண்பாபாடவும் குதிரைத்துள்ளி விழுந்து இறந்துவிட இதுசங்கதிஉபாத்தியாயருக்குத் தெரிந்து காளிங்கராயன் இதனைக்கேட்டால் என்னசெய்வானோ என்று அஞ்சி நடுங்குவதைப் பார்த்து அவர் மகிழும்படி “குதிரைமீளக் கொண்டுவா” என்றகடைசியடியை மாற்றிப்பாடவும் உடனே அப்பரியுயிர்த் தெழுந்தது.இதனைக்கேள்வியுற்ற காளிங்கராயன் இவரை வரவழைக்க இவரும் கப்பங்கொல்லையைக் காத்திருந்த கம்பத்துடனே சென்றாராதலின் இவரைக் கண்ட அரசன் “இந்தகம்பனா அது செய்தவன்” எனக் கேட்டதனால் வந்தபெயரென்றும் பலவாறு கூறுகின்றனர். மகாகவிச் சக்ரவர்த்தியாகிய இவர் இராமபக்தியிலும் ஆழ்வார்பக்தியிலும் ஈடுபட்டிருப்பதைக்கண்டு வியந்த ஸ்ரீரங்கத்து வித்வாமிசர்கள் இவரைக் கம்ப நாட்டாழ்வார் எனப்புகழ்ந்தனர். இவர்காலத்திருந்த புலவர்கள் புகழேந்திப்புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியவர்கள். கம்பர் இயற்றிய நூல்கள் சரஸ்வதியந்தாதி, சிலையெழுபது, இராமாயணம், சடகோபரந்தாதி ஏரெழுபதுமுதலியன. இவற்றுள்; ​ <span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/6"},"num":{"wt":"6"},"formatted":{"wt":"6"},"quality":{"wt":"3"}},"i":1}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/6","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/6"},"params":{},"i":2}},"<pageseparator /><span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/7"},"num":{"wt":"7"},"formatted":{"wt":"7"},"quality":{"wt":"3"}},"i":3}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/7","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/7"},"params":{},"i":4}},"<pageseparator /><span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/8"},"num":{"wt":"8"},"formatted":{"wt":"8"},"quality":{"wt":"3"}},"i":5}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/8","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/8"},"params":{},"i":6}},"<pageseparator /><span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/9"},"num":{"wt":"9"},"formatted":{"wt":"9"},"quality":{"wt":"4"}},"i":7}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/9","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/9"},"params":{},"i":8}},"<pageseparator />"]}'> சரஸ்வதியந்தாதி:— காளி அநுக்கிரகம் பெற்ற சிறு பிராயத்திலேயே தமக்கு மேன்மை யுண்டாவதற்குக் காரணமாகிய சரஸ்வதி தேவியை முப்பது பாட்டுகளைக்கொண்ட ஓரந்தாதியினாற் பாடித்துதித்தனர். கலை மகளும் இவருக்கு அருள்புரிந்து சமயாசமயங்களில் கிருபை பாலித்து வந்ததை கம்பர் இராமாயணம்பாடி அரங்கேற்றியது முதலிய சரி தங்களாலறியலாம். சிலையெழுபது:— வேந்தர் மதிக்கும் வீரக்கவியாகிய இவர் அக்கினிகுலத்தரசர்கள் புகழ்ப்பொருள்விளங்கும் வண்ணம் க்ஷத்ரியர்களுக்குரிய அரசியலைத்தொகுத்து சிலையெழுபது என்னும் இப்பிரபந்தத்தைப்பாடி அக்காலத்தில் காஞ்சியில் அரசுபுரிந்த கருணாகரச் சோழனது சபையிற் கொண்டுபோய் அவனனுமதியால் மூதறிவோர் கேட்டுமகிழும்படி அரங்கேற்றுதல் செய்து, அம்மன்னனால் மகிழ்ந்து கொடுக்கப்பட்ட எழுபத்தொன்பதினாயிரம் பொன், தண்டிகை ஆபரணமுதலிய பூஷணங்களைப் பெற்றதோடு தாமனுபவம் பண்ணிவந்த நிலத்துக்கு அரசிறை கொடுக்கவேண்டியதில் வருஷம் ஆயிரம்பொன் தள்ளிக் கொடுக்கும்படியும் செய்து கொண்டனர். கருணாகரச் சோழன் தொண்டை மண்டலம் ஆண்ட சோழவரசனென்பதும், அவன் சமுகம் இதனைப்பாடிப் பரிசு பெற்றதென்பதும் இந்நூலின் 68-வது கவியில் விரிவாய்க் கண்டுகொள்ளலாம். இராமாயணம்:— மேற்கண்ட இரு நூற்களையும் இயற்றிய சில வருடங்களுக்குப் பின்னர் இரண்டாவது குலோத்துங்கச் சோழனனுமதியின் பேரில் இக்கவிச் சக்ரவர்த்தி இராமாயணத்தைப்வபாடினாராகையால் இவருடைய கவித்திறமை எல்லாம் ராமாயணத்தில் முற்றும் விளங்கிநிற்கின்றது. சடகோபரந்தாதி:— இராமாயணத்தை ஸ்ரீரங்கத்திற்கொண்டுபோ யரங்கேற்ற யத்தனிக்கையில் ஸ்ரீமந்​நாதமுனிகள் கம்பநாட்டாழ்வாரை நோக்கி “நீ நஞ்சட கோபனைப்பாடினால்தான் நாம் உமது இராமாயணத்தைத் திருவுளம்பற்றுவோ மென”, அவ்வாறே நூறு கட்டளைக் கலித்துறையில் சடகோபரந்தாதியைப் பாடி முடித்தார். ஏரேழுபது:— கம்பர் பேரும்புகழும் எய்திய பின்னரே தன்னை வளர்த்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்பமுதலியார் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்கும் வண்ணம் வேளாளர்பேரில் ஏரெழுபதைப்பாடினார். சிலையெழுடதைப் பாடியகாலம்:— ராஜேந்திர பல்லவராயன், கோவிராஜ கேசரிவர்மன், கோவிராஜசக்ரவர்த்திகள் என்று சாசனங்களாலும்,ஐயதரன், ஜயதுங்கன், குலோத்தமன், அபயன் எனக்கலிங்கத்துப் பரணியாதிகளாலும், அநபாயச் சோழனெனப்பெரியபுராணத்தாலும், வழங்கப்படுபவனாகிய முதலாவது குலோத்துங்க சோழனிடம் கருணாகரத் தொண்ட னென்பவன் மந்திரியாகவும் சேனைத் தலைவனாகவும் இருந்து கலிங்கதேசத்தின் பேரிற் போருக்குச்சென்று அந்நாட்டைச் செயித்துத் திரும்பியவனென்று ஜெயங்கொண்டான் பாடிய கலிங்கத்துப் பரணியில் நன்கு உணரக் கிடக்கின்றது. முதலாவது குலோத்துங்கன் கி.பி. 1070 முதல், கி பி. 1118 வரையில், அரசாண்டவனென்று சரித்திர ஆராய்ச்சியில் வல்லோர் பலர்முடிவுகட்டி யிருக்கின்றனர். முதலாவது குலோத்துங்கனுக்குப் பிறகு சிலகாலம் கருணாகரன் காஞ்சியில் அரசு புரியும் சமயத்தே கம்பர் இந்நூலை அவனது சமூகத்தே அரங்கேற்றினாரென்பது உறுதிப்படுகிறதால் சுமார் 800-வருடங்களுக்கு முன்னென்று ஏற்படுகிறது. இனி இராமாயணத்தை எக்காலத்தில் இயற்றினாரென ஆராயப் புகுவோமானால், நாம் மேலே கூறிய முதலாவது குலோத்துங்க சோழனது குமாரனாகிய ​விக்கிரமச் சோழன் கி.பி. 1118 முதல், கி.பி.1128 வரையில் அரசியற்றியவனென்றும், அவனது சமுகத்திலேயே ஒட்டக்கூத்தர் சமஸ்தான வித்வானாயிருந்து அவன்பேரில் விக்கிரமச் சோழனுலாபாடினாரென்றும் புலப்படுகின்றது; நிற்க, ௸ விக்கிரமச் சோழனது குமாரனே இரண்டாவது குலோத்துங்கச் சோழனெனப் பெயர் பெற்று கி.பி. 1128 முதல், கி.பி. 1158 வரையில் அரசியற்றியவன். அச்சோழனுக்கே ஒட்டக்கூத்தர் உபாத்தியாயராகவிருந்து கல்விபயிற்றி வந்ததனால் “பாடும்புலவர்புக ழொட்டக்கூத்தன்பதாம்புயத்தை, சூடுங் குலோத்துங்க சோழனென்றே யென்னைச் சொல்லுவரே” என்றும் அம்மன்னனே கூறியிருத்தலாலும், கம்பரையுங், கூத்தரையுங் கொண்டு இராமாயணத்தைப் பாடுப்படி செய்தவன் இரண்டாவது குலோத்துங்கச்சோழனே என்பதும் வெள்ளிடைமலை போல் விளங்குகின்றது. இத்தகைய ஆதாரங்களை நாம் உற்றுநோக்குவோமாகில் கி.பி.1090 க்குமேல் கி.பி. 1170 வரையில் சுமார் 80-வருட சாலம் கம்பர் ஜீவித்திருந்தவ ரென்பதும், தமது ஜீவதிசையின் முற்பகுதியில் சிலையெழுபதைப் பாடினாரென்பதும் மறுக்கமுடியாத விஷயமாகும். இவரது சரிதையை ஆராயப்புகுவோர் சிலர் முதலாவது குலோத்துங்கன், இரண்டாவது குலோத்துங்கன் என்பவர்களது காலவரையும் இவர்கள் மெய்க் கீர்த்தியையும் அறியாது மயங்குவர். முதலாவது குலோத்துங்கச் சோழன், ஏகசக்ராதிபதியா யரசியற்றியவன்; கலிங்கத்துப்பரணி கொண்டவன். சேக்கிழார் பெருமானுக்கு உத்தமச்சோழப்பல்லவன் என்றஉயர்பட்ட மளித்து அவருக்கு வேண்டிய உதவி புரிந்து பெரியபுராணத்தைப் பாடும்படி செய்தவன்; ​பொன்னம்பலத்தில் பொன்வோடு மேய்ந்து அச்சுபதினத்தைக் குறித்து, “நானிலத்தை முழுதாண்ட ஐபதரர்க்குநாற்பது நாலாண்டில், மீனனிகழ் நாயற்று வெள்ளிபெற்ற உரோசனிநாளிடபம் போதல், தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங் கோயிலெலாம் செம்பொன் மேய்ந்தா, ளேனவருந் தொழுதேத்தும் ராஜராஜன் குந்தவைபூ விந்தையாளே” என்ற விருத்தப்பாவால் தில்லைநடராஜர் கோயில் உள்பிரகாரத்து வடசுவரில் கண்ட சாசனத்தை நாட்டியவனுமாவன். இவன் மகாசிவபக்தனென்று உமாபதி சிவாசாரியார் கோயிற்புராணத்தில் புகழ்ந்துரைதுள்ளார். இம்மன்னனதுகாலத்தில் கம்பர் இராமாயணம் பாடினாரென்று கொள்வது முரண்படும். இவனது காலத்திற்குப் பிறகே கம்பர் இரண்டாவது குலோத்துங்கன் காலத்து இராமாயணத்தைப் பாடிமுடித்தார். சிலையெழுப தென்னும் இப்பிரபந்தத்தின் கருத்து:— “சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களாகிய வன்னியர்கள் முதலில் தெய்வத்தை வணங்கி குரவர்களைப் புகழ்ந்து, வேதசாஸ்திரவிதி வழுவாவகையாக சுபதினத்தில் வில்லை யெடுத்துப் பயின்று பகையை அழித்துச் சயமடைந்து, நால்வகைச் சேனைகளோடும் அரண்களை யுடையவர்களாகி, துவசத்தை நாட்டி, அரசாக்ஷி மண்டபத்துள் சிங்காசனத்தின் மேலமர்ந்து, முடி சூடி, மகரகேயூர கிரீடந்தரித்து, சந்திரவட்டக் குடை நிழல் செய்யும்படி செங்கோல் நடையினால் ஆக்கினாசக்கிரத்தைச் செலுத்தி, தொழினெறி பிறழாது முத்திரை மோதிர மணிந்து, துஷ்ட நிக்கிரகஞ் செய்து, காவல் புரிந்து, யாவரும் தொழுதன் முதலியவை செய்ய செல்வாக்கினால் புகழையடைந்து, குற்றங்கடிந்து, பெருந்தன்மையோடும் இதய வண்மையுடையவராகி, தேவர்களும் பிராமணர்களும் இலக்குயும் மன்னவர்களும் பெண்களும் வித்வான்களும் ​பகைவர்களும் முறையே வியக்கவும், வாழ்த்தவும், வசிக்கவும், திறையளக்கவும், நடிக்கவும் துதிக்கவும், வணங்கவும், ஏற்றதாய இராஜ சமூகத்தோடும் பெரும்பதி இருந்து; அரசர்கள் புடைசூழ நெறி தவறாது, சாந்த முதலிய குணங்களோடு நிறைந்து, ஈதல் வள்ளற்றன்மையுயர்ந்து, அடுத்தவர்களுக்குத் தாழ் வைத்தராது, உமையருளோடும் அகண்ட ஐசுவரியத்தையும் தசாங்கத்தையும் உடையவர்களாகி, தமது குல ஒழுக்கப்படி மனுமுறை வழுவாது அரசு புரிந்து வருகின்ற இவர்களது வில்லைத் தேவரும், மூவரும், அகத்தியனும், அனந்தனும் கூறல் வேண்டுமே யொழிய எம்போல்பவராற் புகழுந் தகமையதோ சொல்வீர்களாக வென” கருணாகரன் கேட்டு பரிசுகொடுக்க கம்பர் பெற்றுக்கொண்டு துதித்தது என்பதாம். இந்நூல் உரையெழுதுவதற்காக முபற்சியெடுத்துக்கொண்ட குலாபிமான சனவான்களாகிய இராஜ வன்னியராஜஸ்ரீ, பூந்தோட்டம வன்னிகுலசேகர, வி. குருசாமி ராயர், காரைக்கால்,வ. இராமலிங்க படையாட்சியார், நாகப்பட்டினம், அரங்க இராமசாமி நாயகர், காரைக்கால் சாஸ்திர ஆராய்ச்சி வி. குருசாமி படையாட்சியார் முதலியவர்களுக்கும், சிரமம்பாராது உரையெழுதிமுடித்த பேழைக்குடி, ம.துரைசாமி நாயகர் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலை ஸ்ரீமான், வன்னி குலோத்தாரணர் கா.கோபால் நாயகரவர்கள் தாம் வெளியிட வேண்டுமெனக் கருதியிருந்தனர். அவர் காலஞ்சென்றுவிட்டமையின் அவரது ஞாபகார்த்தமாகயான் இப்போது இதனைப் பிரகடனஞ் செய்துள்ளேன். இந்நூல் நிலவுலகின் கண் நின்று நிலவுமாறு எல்லாம் வல்ல இறைவனருளைச் சிந்திக்கின்றனன் வன்னிகுல மித்திரன், பெரம்பூர் பாரக்ஸ்மதராஸ். 1915. } ஆ. சுப்பிரமணிய நாயகர். ​ சாத்துக்கவிகள். கும்பகோணத்தில் விளங்காநின்ற ஜகத்குரு: ஸ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகள் ஸ்ரீமடத்தின் ஸன்னித தான சபையின் ஜ்யோதிஸ் தந்திர ஸூக்ஷ்ம தர்சிகளான பிரம்மஸ்ரீ சுந்தரேசுவர சிரௌதிகள் குமாரரும் பண்ருட்டி ஸப் ரிஜிஸ்தராருமாகிய T.S.விசுவநாத சிரௌதிகள். பி.ஏ., அவர்கள் இயற்றிய விருத்தம். அலைகடற் புவியை யாண்ட வங்கி மன்னவரை யேற்றி கலைவள மிகுந்த கம்பன் கழறிய காமர் நூலாஞ் சிலையெழு பதினை யேற்ற தெளிவுரை யொன்றுசேர்த்தி நலமிகு சுப்ர மண்ய நாயக னச்சிட்டானே. சேலம் ஜில்லா ஓமலூர் தாலூக்கா வெள்ளாளப்பட்டி, பண்டித பரம்பரை பிரம்மஸ்ரீ, சாமய்யர் அவர்கள் குமாரர் S.கிருஷ்ணசாமி அய்யரவர்கள், இயற்றிய விருத்தம். பொன்னறம் பொதியு மேனிப் பூவையாட் சுமந்த பேற்றை யின்னறை யிளகுங் கையா லேந்தியிப் படியை யோச்சும் மன்னறங் கொண்ட கோசேர் வன்னியர் புகழை மேனாள் நன்னெறி யாக வன்றே நவின்றனன் கம்ப நாடன். ​ வேறு. காவிருக்குங் கனகமணி யிருநிதிய மமுதமிகுங் கடவு ணாட்டின் கோவிருக்கும் பதியியலுங் கோவிந்தன் முதலாயோர் கொள்ளும் பெற்றி மாவிருக்கும் பண்ணுலகாள் வன்னியரின் மாக்ஷியுமிழ் வசத்த தென்றே நாவிருக்கு நாக்கம்ப நாடனருஞ் சிலையுலகி னாட்டி னானே. நாட்டியசெம் பொற்சிலையா மெழுபதென வரைந்துகம்ப நாடன் சொன்ன பாட்டியலின் பொருளனைத்தும் பாவகர்க்கும் பாரோர்க்கும் பார்த்துத் தீந்தேன் ஊட்டிநிலை நிறுத்தவெனப் பதத்தியலை யனுசரித்தின் னுரையை போங்கித் தீட்டியளித் தானுலகில் துரைசாமி வர்மனெனுஞ் செவ்வி போனே. பொன்மணக்கும் மானுடைய பூமணக்கும் பதிமணக்கும் புத்தே ளாய மன்மணக்கும் மகிமணக்கு மன்பதைக ளேமணக்கு வன்னி யோர்கை வின்மணக்குங் குலமணக்கும் மேன்மேலும் விதிமணக்கும் விளக்க மாகச் சொன்மணக்கும் பனுவல்களின் சுலைமணக்கு மோருரையைச் சொல்லுங் காலே ​ <span>",{"template":{"target":{"wt":":MediaWiki:Proofreadpage_pagenum_template","href":"./மீடியாவிக்கி:Proofreadpage_pagenum_template"},"params":{"page":{"wt":"பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/13"},"num":{"wt":"13"},"formatted":{"wt":"13"},"quality":{"wt":"3"}},"i":1}},"</span>",{"template":{"target":{"wt":":பக்கம்:சிலை யெழுபது மூலமும், 1915.pdf/13","href":"./பக்கம்:சிலை_யெழுபது_மூலமும்,_1915.pdf/13"},"params":{},"i":2}}]}'> வேறு. இக்குவல யத்துளுபர் வுற்றிடுசெம் பொற்சிலையி லட்சணசு விர்த்தி யுரையாய்ந் தெக்குல முதித்தவரு மொப்பிடு மகுத்துவ மிதற்குள தெனக் கருதியே பக்குவ மிகுந்தவா னக்கினி குலத்திலகன் பட்சமிகு சுப்ரமணியன் மிக்கபொரு ளைச்செல விடுத்திதனை யச்சுதவி மெய்ப்புகழ் படைத்தனனரோ. வேறு. முற்காலத் தங்கிகுல முறைமை விளைக்கியகம்பர் முதன்மை யென்கோ பிற்காலத் ததனைமொழி பெயர்த்தவரைப் பெரிதென்கோ பின்பு பேணும் நற்காலம் வாய்த்திகத்தி னாட்டியசுப் பிரமண்ய நாயகப் பேர் தற்காலம் பெரிதென்கோ தாரணியில் நாமுரைக்குத் தகைமை யென்னே. மதுராந்தகந்தாலூகா மலைவைய்யாவூர், கோயில் குமாண்டூர் இளையவல்லி, பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரவர்கள் அபிப்பிராயம். சிலை யெழுபது என்னும் பிரபந்தம் வரப்பெற்றேன். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியினது திவ்ய சரிதையை செந்தமிழிற் புனைந்த கவிச்சக்கரவர்த்தி யா​கிய கம்பநாட்டாழ்வார், அலைகடற் புவியை யாண்ட அக்கினிகுலத் தரசர்களின் குலவுற்பவம் குலமாட்சிமை அரசின் சிறப்பு முதலியவைகளை எழுபத்தொன்பது செய்யுட்களால் சொன்னயம் பொருணயம் விளங்கக் கூறியிருக்கிறார். இலக்கண இலக்கிய சங்க நூற்கள் யாவையும் ஒருங்கே கற்றுணர்ந்த பேழைக்குடி ம-௱-௱-ஸ்ரீ, துரைசாமி நாயகரவர்கள் நூலாசிரியரின் கருத்தைத்தழுவி ஆங்காங்கு ராமாயண முதலிய நூற்களின் மேற்கோள்களுடன் உரையெழுதியிருப்பது பெரிதும் புகழ்தற்பாலதே. “வன்னிகுல மித்திரன்”' பத்திராதிபர் ம-௱-௱-ஸ்ரீ, ஆ. சுப்பிரமணிய நாயகரவர்கள், கம்பர் வரலாறென முதலில் எழுதி சேர்த்திருக்கும் விஷயத்தில், கம்பர் எனப் பெயர்வந்ததற்கு காரணங்களும், அவரியற்றிய நூற்களும், அவரது காலத்தினை நிலை நாட்டியதும் தற்கால சரித்திர ஆராய்ச்சி செய்வோர் அனைவரும் கொண்டாடத் தக்கதே. பழைமையும், பெருமையும் வாய்ந்த இந்நூல் வெளிவந்ததற்கு அத்யந்த சந்தோஷப் படுகிறேன். குலாபிமான மேலிட்டால் தம்மா போரனைவரும் இப்பிரபந்தத்திற் கூறும் அருமை பெருமையினை யுணர்ந்து கடைத்தேறுவார்களென இதனை வெளிப் படுத்திய நாயகரவர்கட்கு எம்பெருமான் கிருபை பாலிப்பாராக. ​ காஞ்சிபுரம்,மஹா வித்வான், ஸ்ரீமான். இராமசாமி நாயுடு அவர்கள் இயற்றிய அறுசீராசிரிய விருத்தம். சீரேறு கவிச்சக்ர வர்த்தியெனத் திகழ்பெயராற் சிறந்த கம்பன் போரேறு வன்னியர்தம் புகழ்புவியி லெஞ்ஞான்றும் பொலிந்து தோன்றப் பாரேறு தமிழறிஞர் யாவருமேத் தெடுப்பமுன்னாள் பகர்ந்த வின்சொற் பேரேறு சிலையெழுப தெனுநூலொன் றெழில்மிக்கு பிறங்கு மன்றே. அன்னதனுக் குரையில்குறை யகத்துனிப்பே ழைக்குடிவா ழருந்தமிழ்க் கோன் பன்னரிய துரைசாமி நாயகப்பேர்ப் பருணிதன்ஏற் பலவும் வாய்ப்பச் சொன்னயம்பற் பலவுமிக்குத் தோன்றவுரை யொன்றளித்துத் துகளில் சீர்த்திக் கொன்னுறுசுப் பிரமணியக் குரிசிலச்சிட் டுபகரித்தான் குவல யர்க்கோ. ​ சித்தாந்தம் பத்திராசிரியர் அஷ்டாவதானம் பூவை, சிவஸ்ரீ, கலியாணசுந்தர யதீந்திரர் அவர்களியற்றிய

Page 1 of 1

Public Domain (Wikisource; Wikidata pub/death check)

Public-domain text, read inside the house. Position stays on this device.

loyalties.space is the house for book authors: letters, the retail desk, and the launch. President Izno writes Netherfiend. Reviews are never bought. Lists are never rented. The house keeps the letters, the library, and the launch desk.

Amber Kumar, Defence Road, Tilpata Karanwas, Greater Noida, Uttar Pradesh 201306, India · hello@loyalties.space

Nothing playing. Choose a book to read or listen.