Skip to content
loyalties.space
Cart0
Back to the book

Bharat Shelf

மனோன்மணீயம்

Manonmaniam Sundaram Pillai · 1891

மனோன்மணீயம் - விக்கிமூலம் உள்ளடக்கத்துக்குச் செல் முதன்மைப் பட்டி முதன்மைப் பட்டி move to sidebar மறை வழிச்செலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் ஆலமரத்தடி நாட்டுடைமை நூல்கள் உதவி தொகுத்தல் உதவி ஆவணங்கள் உதவி கோருக புதுப்பயனர் உதவி தமிழில் எழுத ஏதாவது ஒரு படைப்பு ஏதாவது ஓர் அட்டவணை Display Options தேடு தேடு தோற்றம் நன்கொடையளி கணக்கை ஆக்கு புகுபதிகை தனிப்பட்ட கருவிகள் நன்கொடையளி கணக்கை ஆக்கு புகுபதிகை உள்ளடக்கம் move to sidebar மறை தொடக்கம் 1 மனோன்மணீயம்- நாடகம் Toggle மனோன்மணீயம்- நாடகம் subsection 1.1 ஆசிரியர்: சுந்தரம்பிள்ளை 1.1.1 நூலாசிரியர் எழுதிய முகவுரை 1.2 கதாசங்கிரகம்(கதைச்சுருக்கம்) 1.3 I 1.4 II 1.5 III 1.6 IV 1.7 V பொருளடக்கத்தை மாற்று மனோன்மணீயம் மொழிகளைச் சேர் தொடுப்புகளைச் சேர் பக்கம் உரையாடல் தமிழ் படிக்கவும் தொகுக்கவும் பக்க வரலாறு கருவிகள் கருவிகள் move to sidebar மறை செயல்கள் படிக்கவும் தொகுக்கவும் பக்க வரலாறு பொது இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று நிலையான தொடுப்பு இப்பக்கத்தின் தகவல் இப்பக்கத்தை மேற்கோள் காட்டு குறுகிய உரலியைப் பெறு Switch to legacy parser தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்கிப்பீடியா விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு அச்சு/ஏற்றுமதி அச்சுக்கான பதிப்பு EPUBஆக பதிவிறக்குக MOBIஆக பதிவிறக்குக Download PDF வேறு வடிவத்தில் பதிவிறக்க பிற திட்டங்களில் விக்கிபீடியா விக்கித்தரவுஉருப்படி தோற்றம் move to sidebar மறை Download விக்கிமூலம் இலிருந்து மனோன்மணீயம் (1891) ஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை மூலம்→ உடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை, விக்கித்தரவு. 4736மனோன்மணீயம்பெ. சுந்தரம் பிள்ளை1891 - - - - - இவ்வடிவில் பதிவிறக்குக மனோன்மணீயம்- நாடகம் [தொகு] (ஐந்தங்கத் தமிழ்க் கவிதைநாடகம்) ஆசிரியர்: சுந்தரம்பிள்ளை [தொகு] நூலாசிரியர் எழுதிய முகவுரை [தொகு] "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்." "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ." "கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ." - என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண்மையே யென்பது, பரத கண்டம் என்னும் இந்தியா தேசத்திலுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண்ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும், இலக்கண நுண்மையிலும், இலக்கிய விரிவிலும், ஏனைய சிறப்புக்களிலும் மற்றக் கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமை சான்ற இத்தமிழ்மொழி, பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்குச் சமமோ, தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி, அபிவிருத்தியற்று நிற்கின்றது. இக்குறைவு நீங்கத் தங்களுக்கியன்ற வழி முயற்சிப்பது, தங்களை மேம்படுத்தும் தமிழ் மொழியைத் தம் மொழியாக வழங்கும் தமிழர் யாவரும் தலைக்கொள்ளத் தவறாக் கடன்பாடன்றோ! சுந்தரன் பாமாலை /கவிமணி (வெண்பா) 1. ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த பேரா சிரியர் பெருமானைச் - சீராரும் வஞ்சிமா மன்னர் மதித்தகுண சுந்தரனை நெஞ்சமே! நித்தம் நினை. (வேறு) 2. தாலம் புகழும் திருஞான சம்பந் தப்பேர் முனிவாழ்ந்த காலமதனை ஆராய்ந்து கற்றோர் மெச்சக் கணித்திட்டோன் ஆலப் புழைமா நகருடைய அறிஞன்பெருமாள் அரும்புதல்வன், சீலஞ் சிறந்த சுந்தரனைச் சிந்தை மகிழ்ந்து போற்றுவமே. 3. தில்லைப் பெருமான் அருள்பெற்றுச் செல்வன்நட ராசனைப் பெற்றோன், நெல்லை இந்து கலாசாலை நிறுவித் தலைமை தாங்கி நின்றோன், சொல்லி லமுதம் கனிந்த சுவை சொட்டச் சொட்டக் கவிதருவோன் நல்லன் பகதூர் சுந்தரனை நாளும் நாளும் போற்றுவமே. 4. ஊக்கம் குன்றி உரம்குன்றி ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி ஆக்கம் பெருக, அறிவோங்க, ஆண்மை வளரச்செய்(து), உலகில் மீக்கொள் புகழைப் பெற்றெழுந்த விறலோன் நமது சுந்தரைனைப் பாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம் பாடி இனிது போற்றுவமே. 5. தேடி வைத்த செல்வமெல்லாம் திரைகொண் டோட வருந்திமுகம் வாடி மெலிந்த தமிழணங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட நாடும் அரிய மனோன்மணிய நாடகத்தைச் செய்தளித்த நீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே. 6. வையம் புகழும் திருவஞ்சி வளநா டதனை முடிசூடிச் செய்ய முறைசெய் தரசாண்ட சேர மன்னர் சரிதமெலாம் ஐயம் இன்றிச் சிலையிலெழுத்(து) ஆய்ந்து சொன்ன பேரறிஞன் துய்ய சீலன் சுந்தரன்பேர் சொல்லி நாளும் போற்றுவமே. 7. ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன், பாடித் திருவா சகத்தேனைப் பருகிப் பருகி இன்புறுவோன், கோடைப் பதிசுந் தரமுனியைக் குருவாய்க் கொண்ட குணசீலன் ஈடில் லாத பேரறிஞன், எங்கள் பெரியன் சுந்தரனே. (வேறு) 8. சித்திரம் வரைந்து காண்போம், சிலைகண்டு தொழுது நிற்போம் சத்திரம் கட்டி வைப்போம், தருமங்கள் பலவும் செய்வோம் வித்தகன் சுந்த ரன்பேர் மெய்ம்மையாய் விளங்க வைத்தல், இத்தமிழ் நாட்டில் வாழும் எம்மனோர் கடமை யன்றோ? (வேறு) 9. எம்மொழியும் ஈடாகா திம்மொழிக் கென்றுலகம் செம்மையுறக் கண்டு தெளிந்திடவே - நம்மினிய செந்தமிழின் தெய்வச் சிறப்பெல்லாம் யாருரைத்தார் சுந்தரனைப் போலத் தொகுத்து? 10. சிந்தை கவரும் சிவகாமி நற்சரிதம் செந்தமிழில் சுந்தரன் செய்ததனால் - முந்தவரு மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பென்றே எவரும் சாலப் புகழ்ந்திடவே தான். 11. ஆசிரியன் பேர்விளங்க ஹார்வி புரம்கண்ட மாசிலா மாணவர் மாணிக்கம் - பேசுபுகழ்ச் சுந்தரன் வந்துதித்த தொல்குலம் இந்நிலத்துச் சந்ததம் வாழ்க, தழைத்து! அறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன. /கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (நூல்: மலரும் மாலையும்) மேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும், அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது, முன்னோராற் பொருட்சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவையொழிய, இனியும் இறவாது மறைந்து கிடப்பனவற்றை வெளிக்கொணர்ந்து நிலைபெறச் செய்தலேயாம். இவ்வழியில் பெரிதும் உழைத்துப் பெரும்புகழ் படைத்த ம-ரா-ரா-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரமஸ்ரீ சாமிநாத அய்யர் அவர்கள் முதலிய வித்துவசிரோமணிகளுடைய நன்முயற்சிக்கு ஈடுகூறத்தக்கது யாது? தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்விகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க, அம்மக்கள், அவை இருக்குமிடந் தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமை போலன்றோ ஆகும், ஈடும்எடுப்புமற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமுமுடைய நம் முனனோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல்! ஆதலால், முற்கூறிய உத்தம வித்துவான்களைப் பின்றொடர்ந்து, நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங்களைச் சோதனை செய்து, தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப்பொருளை க்ஷேமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற்கடமையாகும். பூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும், அதனைப் பாதுகாப்பதோடு, ஒவ்வொருவரும் தமக்கியன்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும், புதுவரும்படியைச் சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான உலகநோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவர்க்கும் விட்டுவிலகத் தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு. அந்தஅந்தத் தலைமுறையார்களுக்கு, அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவும் சிறப்பேயொழிய வேறி்ல்லை. அத்தலைமுறையாரைப் பின் சந்ததியார் பேணுவதற்கும் அதுவே யொழிய, வேறு குறியுமில்லை. ஆனதினால், எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சித்தித்திருப்பவற்றை, ஒவ்வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமின்றித் தங்களாற்கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமை பூண்டவர்களாகின்றார்கள். பூர்வார்ஜிதம் மிகவும் பெரிதா யிருக்கின்றதே! நம்முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப்பினும்நமது பூர்வார்ஜிதத்தின்முன் அஃது ஒருபொருளாகத் தோன்றுமா? என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு, அவர் பூர்வார்ஜிதப்பெருமை கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும். அந்தோ! இக்கேட்டிற்கோ, நம்முன்னோர், நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள்! பிதிர்களாய் நிற்கும் அம்முன்னோர், இவ்விபரீத விளைவைக் கண்டால், நம்மை எங்ஙனம் வாழ்த்துவர்? இக்கூறிய உண்மை, செல்வப்பொருளுக்கன்றிக் கல்விப் பொருளுக்கும், ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையார்க்கும் ஒன்று போலவே பொருத்தமுடையதாதலால், "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்." -என்னும் திருக்குறளை நம்பிநம் முன்னோர் யாதேனும் ஒருவழியில் அபரிமிதமான சிறப்படைந்தாராயின், நாமும் அவர்போலவே இயன்ற அளவும் முயன்று பெருமை பெறக்கருதுவதன்றோ, அம்முன்னோர்க்குரிய மக்கள்நாமென முன்னிற்றற்கேற்ற முறைமை! தீங்கரும்பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு- ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம், பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை. ஆதலால், அருமையாகிய பூர்வ நூல்களைப் பாதுகாத்துப் பயின்று வருதலாகிய முதற்கடமையோடு, அவ்வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக்கேற்றவாறு புது நூல்களை இயற்றமுயலுதல், தமிழ்நாடென்னும் உயர்குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையாருக்கும் உரித்தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது. மேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற் கொண்டு, தமிழோர் என்னும் பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறையாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன், இசையா தெனினும், இயற்றியோ ராற்றல் அசையாது நிற்பதாம் ஆண்மை" என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து, நவீனமான பலவழிகளுள்ளும் என் சிறுமதிக்கேற்றதோர் சிறுவழியிற் சிலகாலம் முயன்று, வடமொழி முதலிய பாஷைகளிலுள்ள நாடகரீதியைப் பின்றொடர்ந்து இயற்றிய மனோன்மணீயம் என்னும் இந்நாடகம், பூர்வீக இலக்கியங்களுடன் சற்றேனும் உவமிக்க இயையாதெனினும், ஆஞ்சனேயராதி வானர வீரர்கள் சேதுபந்தனஞ் செய்யுங் காலத்தில் கடனீரிலே தோய்ந்து மணலிற் புரண்டு அம்மணலைக் கடலில் உகுத்த சிறு அணிற்பிள்ளையின் நன்முயற்சி அங்கீகரிக்கப் பட்டவாறே, கல்வி கேள்வியால் நிறைந்த இத்தலைமுறைச் சிரேஷ்டர் அங்கீகரித்து, எனது இச்சிறு முயற்சியும் தமிழ் மாதாவுக்கு அற்பிதமாம்படி அருள்புரியாதொழியார் என நம்பிப் பிரகடனம் செய்யப்படுகின்றது. இந்நாடகம் வடமொழி, ஆங்கிலேயம் முதலிய பாஷைகளில் உள்ள நாடக வழக்கிற்கிசையச் செய்திருப்பதால், இதனுள்ளடங்கிய கதை, அங்கங்கே நடந்தேறும் சம்பாஷணைகளாலும், அவாய்நிலைகளாலும் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளவேண்டியதாயிருக்கின்றது. இக்கதை புதிதாக இருப்பதினால், அவ்விதம் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளுவோர்க்கு அநுகூலமாகச் சுருக்கி ஈண்டுக் கூறப்படுகின்றது. கதாசங்கிரகம்(கதைச்சுருக்கம்) [தொகு] முற்காலத்தில் மதுரைமாநகரில், சீவகன் என ஒருபாண்டியன் அரசுபுரிந்து வந்தான். அவன், பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன், ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவனாயினும், முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். அதனால், அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன்போல நடித்து, அவனை எளிதிலே தன் வசப்படுத்திக்கொண்டான். அங்ஙனம் சுவாதீனப்படுத்திய பின்பு, தன்மனம் போனபடி யெல்லாம் அரசனையாட்டித் தன்செல்வமும் வளர்த்துக் கொள்ளத் தொன்னகராகிய மதுரை இடங்கொடாதென உட்கொண்டு, அந்நகரின்மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலிய இயற்றுவித்து, அவ்விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும்படி செய்தான். முதுநகராகிய மதுரை துறந்து, கெடுமதியாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் சீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று, அவனுடைய குலகுருவாகிய சுந்தரமுனிவர், அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஆச்சிரமம் வந்தமர்ந்தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே, இந்நாடகத்துட் கூறப்படுவது. முக்கிய நாடகப் பாத்திரங்கள் ஜீவகன்: பாண்டியமன்னன். மனோன்மணியின் தந்தை. சீவகவழுதி என்றும் அழைக்கப்படுபவன். மனோன்மணி: நாடகத்தலைவி. பாண்டியமன்னன் ஜீவகனின் அருமைப்புதல்வி. குடிலன்: பாண்டியமன்னன் ஜீவகனின் அமைச்சன். சூதுமனம் கொண்டோன். பாண்டியஅரசினை ஆளச் சமயம் பார்த்துக் கொண்டிருப்பவன். வாணி: மனோன்மணியின் தோழி. புதுமைப்பெண். சகடர்: வாணியின் தந்தை. பேராசைகொண்டவன். நடராஜன்: வாணியின் காதலன். நாராயணன்: சீவகவழுதியின் சேனைத்தலைவன்; நலம்நாடுபவன். பலதேவன்: குடிலனின் மகன். புருடோத்தமன்: சேரமன்னன்;மனோன்மணியைக் கனவில் கண்டுகாதல்கொண்டவன். சுந்தரமுனிவர்: சீவகவழுதியின் குலகுரு. நிஷ்டாபரர், கருணாகரர்:சுந்தரமுனிவரின் சீடர்கள் முருகன் பாண்டியப்படைவீரன் அருள்வரதன் சேரர்படைச் சேனாபதி முனிவர் எழுந்தருளியிருப்பதை உணர்ந்து, சீவகன், அவரைத் தன் சபைக்கழைப்பித்து. தனது அரண்மனை கோட்டை முதலியவற்றைக் காட்டி, அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கணணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக் கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் க்ஷேமகரமாகச் சில கிரியா விசேஷம் செய்யும்பொருட்டு, அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கிக்கொண்டு, தம் ஆச்சிரமம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக, மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனள். அவள், அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்போது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சமும்போல, யாதொரு பற்றும் களங்கமுமற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவள், வாணி. இவள், ஒழுக்கம் தவறா உள்ளத்தள்;தனக்கு நன்றெனத் தெள்ளிதின் தெளிந்தவற்றையே நம்புந் திறத்தள்; அல்லவற்றை அகற்றும் துணிபுமுடையள். இவ்வாணி, நடராஜனென்ற ஓர் அழகமைந்த ஆனந்த புருஷனை யிறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக, இவ்வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குந் தன் மகளை மணம்புரியின் தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசை கொண்டு, அவ்வாறே அரசன் அநுமதிபெற்று விவாகம் நடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதாயிருந்தது. இச்சோகம் நீங்க, மனோன்மணி, பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளாயிருந்தாள். இவ்வாறிருக்கும்போது, முனிவர் கோட்டை காண வந்த நாள் இரவில், ஈடும் எடுப்புமற்ற சேரதேசத்தரசனாகிய புருடோத்தவர்மனைப் பூருவ கருமபரிபாகத்தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள, அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச்சுரம் இன்ன தன்மையதென்றுணராது வருந்தும் சீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட் காலமே வந்த முனிவர், மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள்நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்தமுடையோன் சேரதேசத்துப் புருடோத்தமனே எனவும், அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்கவல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன்மேல் அவள் பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன், அக்குருமொழியை உட்கொள்ளாதவனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினன். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேரதேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்திரியத்திற்கு எங்ஙனம் கெடுதிவருமோ என்ற அச்சத்தாலும், ஒருகால் தன்மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும், அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும், முனிவர் மனத்தைத்தடுப்பதற்குத் துணிந்து தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம்பேசப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக்கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படியறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அனுப்பவேண்டுமென்றும், அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்துவிடலாமென்றும் ஒரு சூதுகூற, அதனை அரசன் நம்பி, குடிலன் மகன் பலதேவனையே, இவ்விஷயத்திற்குத் தூதனாக அனுப்பினான். சேரதேசத்திலோ, புருடோத்தமன் தனக்குச் சிலநாளாக நிகழ்ந்துவரும் கனாக்களில் மனோன்மணியைக் கண்டு காமுற்று, அவள் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி, யாருடனேனும் போர் நேர்ந்தால் அவ் ஆரவாரத்திலாயினும் தன்மனத்தைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதா என்ற நோக்கமுடன் இருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற், பலதேவன் சென்று தன்பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகௌரவமான துர்வாதம் சொல்லவே, புருடோத்தமன் கோபம் கொண்டு போர்க்கோலம் பூண்டு, பாண்டிநாட்டின்மேற் படையெடுத்துப் புறப்பட்டான். அச்செய்தி அறிந்து சீவகனும், போருக்கு ஆயத்தமாகவே, இருபடையும் திருநெல்வேலிக்கு எதிரிலே கைகலந்தன. அப்படிப் போர்நடக்கும்போது, பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை, அவன் கீழிருந்த ஒரு சேவகன் தன்வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும், படை முழுதும் குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித் தாக்க நேரிட்ட காரணம் ஏதென்றால், பலதேவன் களவுவழிக் காமம் துய்க்கும் துன்மார்க்கனாதலால், அப்படைஞனது சகோதரியைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டது பற்றி உண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கியபொழுது கூறிய வன்மொழியாலும், அவன் தங்கைக்கு அரண்மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த பொற்றொடி அவன் கையில் அக்காலம் இருந்தமையாலும் வெளிப்படுகின்றது. படை நியதிகடந்த அச்சேவகனை, அருகுநின்ற வீரர், அக்கணமே கொன்றுவிட்டார்கள். பலதேவனும் மூர்ச்சை தெளிந்துகொண்டான். ஆயினும், படையிற் பிறந்த குழப்பம் தணியாது பெருகிவிட்டதனால், பாண்டியன் சேனை சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு, ஜீவகன் உயிர்தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்தியவாதியாகிய நாராயணன் என்னும் ஒரு சுத்தவீரன், அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் போர்ககளத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பான். இந்நாராயணன் யாரென்றால்,

Page 1 of 1

Public Domain (Wikisource; Wikidata creator death + pub-year check)

Public-domain text, read inside the house. Position stays on this device.

loyalties.space is the house for book authors: letters, the retail desk, and the launch. President Izno writes Netherfiend. Reviews are never bought. Lists are never rented. The house keeps the letters, the library, and the launch desk.

Amber Kumar, Defence Road, Tilpata Karanwas, Greater Noida, Uttar Pradesh 201306, India · hello@loyalties.space

Nothing playing. Choose a book to read or listen.